Wednesday, July 18, 2012

நாத்திகம்

நாத்திகம் இதுவரை எனக்கு எதுவும் தந்தது இல்லை
இனியும் தராது
ஒரு போதும் எனக்கு பாதுகாப்பு தந்தது இல்லை
என் கண்ணீரை துடைத்தது இல்லை
பொய்களிடமும் துரோகத்திலும் இருந்து என்னை காப்பாற்றியது இல்லை
என் வெற்றிகளையும் தோல்விகளையும் பற்றி அதுக்கு ஒரு போதும் கவலை இல்லை
எனக்கு எது சரி எது தவறு என்று சொல்லியது இல்லை
என் கனவுகளை உண்மையாக ஒரு போதும் உதவாது
நாத்திகம் ஒரு போதும் என் அகத்தை தூண்டியது இல்லை
அதை நம்ப வேண்டும் என்று என்னிடம் கட்டளையிட்டது இல்லை
என்னை ஒரு போதும் கீழே விழுக வைத்து இல்லை
என் சாவுக்கு பின் வர போகும் நரகத்தை பற்றி பேசியது இல்லை
யாரையும் வெறுக்க சொல்ல வில்லை
யாரையும் நேசிக்கவும் சொல்ல வில்லை
என் வெற்றிக்கெல்லாம் ஒரு போதும் பொறுப்பு ஏற்று கொண்டது இல்லை
என் துயரங்களுக்கு எல்லாம் ஒரு போதும் அபத்தமாக பதில் அளித்தது இல்லை
எனக்கு நாத்திகம் அறிவுரை செய்தது இல்லை
ஆம் நாத்திகம் எனக்கு எதுவும் செய்தது இல்லை
நான் அதனிடம் எதுவும் கேட்டது இல்லை..
நான் நம்பிய கடவுள் எது எல்லாம் என்னிடம் இருந்து பறித்து கொண்டாரோ அது மட்டுமே நாத்திகம் எனக்கு தந்தது..
இப்போது நான் நானாகவே இருக்கிறேன்
உண்மைகளை உணர்கிறேன்..
உங்கள் வார்த்தைகளையும் கோவத்தையும் என்னிடம் காட்டாதீர்கள்
உங்களையும் உங்கள் கடவுளையும் நான் அவமான படுத்த வில்லை
அவர் இல்லை என்று நான் சொல்ல வில்லை
அவர் எனக்கு வேண்டாம் என்று தான் சொல்கிறேன்
என் வாழ்கையை நானே வாழ்ந்து விட்டு போகிறேனே
அவர் வாழ்கையை அவர் வாழ்ந்து விட்டு போகட்டும்
நாத்திகத்தை பிடித்து கொண்டு வாழவில்லை
கடவுளை விட்டு விட்டு உண்மைகளுடன் வாழ்கிறேன்
நான் கோவில்களையும் மசுதிகளையும் இடிக்க சொல்ல வில்லை
கடவுளிடம் மண்டியிட வேண்டாம் என்று சொல்ல வில்லை
உங்கள் கடவுள் உங்கள் கால் என்ன வேனாலும் செய்யுங்கள்
கடவுளுக்கு காணிக்கை தராதீர்கள் என்று சொல்ல வில்லை
உங்கள் கடவுள் உங்கள் காணிக்கை என்ன வேனாலும் செய்யுங்கள்
எனக்கு நாத்திகன் என்று முத்திரை குத்தி, அந்நிய படுத்தி என் வாழ்கையை கேள்வி கேட்காதீர்கள்
உங்களை போல் நான் வாழவில்லை என்பது உண்மை
அதற்கான அவசியம் எனக்கு இல்லை என்பதும் உண்மை
நாத்திகன் என்றால் எல்லாவற்றிலும் பகுத்தறிவோடு இருப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள்
என்னிடமும் சுயநலம் உண்டு, என்னிடமும் கோவம் உண்டு, என்னிடமும் ஆசைகள் உண்டு
நான் பகுத்தறிவோடு இருப்பதும், நாத்திகவாதியாக இருப்பதை விட நான் நானாக இருப்பது தான் எனக்கு முக்கியம்..
நீங்கள் சொல்லும் நாத்திகவாதத்தை பற்றி எனக்கு ஏதும் தெரியாது அதை பற்றி என்னிடம் ஏதும் கேட்காதிர்கள்
நான் சொல்லும் நாத்திகத்தை பற்றியும் என்னிடம் ஏதும் கேட்காதிர்கள்
என்னிடம் எந்த பதிலும் இல்லை, எந்த முடிவுகளும் இல்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இப்போது இருக்கிற என் கருத்துகள், என் கனவுகள், என் ஆசைகள் என் கொள்கைகள் எல்லாம் மாறக்கூடும்
அது என் தேடலை சார்ந்தது
உங்கள் கடவுளை சார்ந்தது இல்லை
என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்
எல்லாவற்றுக்கும் திமிராக பதில் சொல்பவள் நாத்திகவாதி என்றால் சரி அப்படியே அழையுங்கள்
எனக்கு தெரிந்து எந்த நாத்திகனும் நாத்திகதிற்காக உயிரை விட்டது இல்லை,
நீங்கள் சொல்லும் ஆத்திகவாதிகள் யாரும் உலகை மாற்றியது இல்லை
உலகின் அற்புதமான கலைகளை உருவாக்கிய கலைஞர்கள் எல்லாம் நாத்திக வாதிகள் தான்!
நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன்
நாத்திகவாதியாக அல்ல
பகுத்தறி வாளியாக அல்ல
நான் நானாக…..   
Arthi Vendan எழுதியது

Monday, May 28, 2012

நீயா நானா.. சரிதானா??

நீயா நானா.. சரிதானா?? நீயா நானா, என்பது பொது விவாத நிகழ்ச்சியா? இல்லை ஒருதலைபட்சமாக நடக்கும் கருத்து திணிப்பா..?? சில நாட்களாக இந்நிகழ்ச்சியில் நடக்கும் விவாதங்களை கவனித்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுக்கு பார்வையாளர்களை இழுத்துசெல்லும் படியான விவாதமாகத்தான் இருக்கிறது. மீறி எதிர்கருத்து கூறுவோரை அசிங்கபடுத்தி அடக்கிவிடுவதும் தெரிகிறது. இந்நிகழ்ச்சி/கோபிநாத் தன் கருத்துகளை சமூக கருத்தாக பரப்புரை செய்வதாக தோன்றுகிறது. நிகழ்ச்சியின் போக்கையும், சிறப்பு விருந்தினர்களையும் கவனித்தால் இது என்னவோ Psychological Influencing-Social Media Marketing போல் தோன்றுகிறது. உதாரணமாக: எல்லா நிகழ்ச்சியிலும் தன்னை நடுநிலைவாதி என்று அடையாளப்படுத்திகொள்ளும் திரு கோபிநாத், போன வார அரசியல் தலைப்பில் சாதி கட்சிகள் தவறில்லை என்பன போன்ற வாதங்கள் பெரும் முரண்பாடானவை. இதனை பொதுமக்கள்/சமுதாய கருத்தறியும் பொது விவாத நிகழ்ச்சியாக கருத முடியவில்லை.

  • டாக்டர் வேலையை விட்டுவிட்டு திரைத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று பவர் ஸ்டாரை பார்த்து கேட்ட கோபிநாத் , கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு திரைத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று சூப்பர் ஸ்டாரை பார்த்து கேட்க்க முடியுமா?
  • உங்க சொந்தக் காசுல உங்க படத்தை ஓட்டறீங்களா என்று பவர் ஸ்டாரை பார்த்து கேள்வி கேட்ட கோபிநாத் , கருணாநிதியை பார்த்து , உளியின் ஓசை , கிழவரின் இம்சை , பெண் சிங்கம் , அசிங்கம் , இளைஞன் , வயோதிகன் , என்றெல்லாம் மக்களை இம்சிக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுதி சொந்தக் காசு கூட இல்லாமல் ஊர் காசை அடித்து படத்தை ஓட்டுறீங்களா என்று கேள்வி கேட்க்க திராணி இருக்கிறதா ?

    மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
    எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
    தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
    கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
    ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
    பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
    குறைந்துவிடவில்லை...

    சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
    படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
    விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
    சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

    நான் அவர் படமும் பார்த்தது இல்லை..
    ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
    தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

    மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
    தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..