Sunday, July 15, 2018

ஆயுத பலம்

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இலங்கை அரசின் இராணுவ பலமென்ன..?

80களில் இலங்கை அரசின் புலனாய்வு வலையமைப்பு, இராணுவ தகவல் தொழில் நுட்பம், அதி நவீன கனரக ஆயுதங்கள், செய்மதி மூலம் கண்காணித்தல், உலகப் புலனாய்வு வலையமைப்புகளோடு இணைக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்தளவில் வளர்ச்சி அடைந்திருந்தது?

தம்முடைய பிராந்திய தேவைகளுக்காக ஈழத்தின் போராட்ட இயக்கங்களுக்கு  பயிற்சியும், ஆயுதங்களும் இந்தியா கொடுக்க முன்னர் எம்முடைய இராணுவ வளர்ச்சியும் வளமும் எந்தளவில் இருந்தது..?

அப்போது உருவாகிய இராணுவ தலைமைகளில் தம்பிப்பிள்ளை மகேஸ்வரனின் (TEA) மட்டுமே இந்தியாவில் பயிற்சி பெறாமல் சுயம்பாக உருவாகியது.
இந்தியாவில் பயிற்சி பெற்ற இயக்கங்களுள் புலிகள் அமைப்பு மட்டுமே இந்தியாவின் சதிக்குள் வீழாமல் சுயமாக இயங்கியது.

விமானப்படை தவிர்ந்த இராணுவ  வளர்ச்சியில் ஏறத்தாள இலங்கை அரசை எதிர் கொள்ளக் கூடியதாக இருந்து போராடிய காலமும், இப்போது நாமிருக்கும் கையறு நிலையும், எதிரியின் பலமும் இலங்கை மீதான உலகின் தேவையும் ஒன்றானதா?

உலக ஒழுங்கின் தேவைக்கு ஏற்ப உச்சமாக வளர்ச்சி அடைந்து இன்று அனைத்து தேசங்களையும் இணைக்கும் இராணுவ புலனாய்வு கண்காணிப்பு வலையமைப்பு இயங்கும் முறையும், நாம் போராடி வளர்ச்சி அடைந்த காலமும் ஒன்றானதா..?

எமக்கான ஆயுத வழிப்பாதைகளையும், கடல்வழிப்பாதைகளையும் துல்லியமாகக் கண்காணிக்கும் தொழில் நுட்ப வலையமைப்பு இணைக்கப்பட்டு எம்முடைய  உள்வரும் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட நாம் பலவீனமானோம், தவிரவும் இராணுவ தொழில் நுட்பத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த பல தேசங்கள் நேரடியாக இலங்கை அரசோடு உள்ளகத்திலும் இறங்கிச் செயற்பட்ட போது முடிந்தவரை முயன்று பார்த்து கடைசியில் என்ன காரணத்துக்காக ஆயுதங்களை மெளனிப்பதாக அறிவித்தோம்?

அன்று ஆயுத, இராணுவ பலத்தில், தொழில் நுட்ப வளத்தில் மன ஓர்மத்தையும் வைத்து கேள்வி கேட்க முடிந்த எம்மால் இன்று நாமுள்ள நிலையில் அதே போலொரு போராட்டத்தை உடனடியாக முன்னெடுக்க முடியுமா..?

யதார்த்த களநிலையில் அடையாளக் குண்டெறிதல் புத்திசாலித்தனமானதா..?
ஆயுதங்கள் மெளனிப்பதாக அறிவித்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ஒரு கைக்குண்டைக் கூட எம்மால் வெற்றிகரமாக இன்னும் எறிய முடியவிலையே ஏன்..?

சரி அங்கிங்காய் சிலரிடம் இருக்கும் மிகச் சொற்ப ஆயுதங்களை எடுத்து நீண்டதொரு ஆயுதப்போராட்டத்தை இப்போதைக்கு நிகழ்த்த முடியுமா..? 

முப்பது வருடமாக பல நவீன யுத்தங்களையும், வல்லாதிக்க நகர்வுகளையும் நேரடியாக எதிர்கொண்ட அனுபவம் உள்ள எமக்கே மீண்டுமொரு நடவடிக்கையை இத்தனை ஆண்டுகள் ஓடியும் ஒழுங்குபடுத்துவது இவ்வளவு சிரமமாக இருக்கின்ற போது

எந்த ஆயுதப் போராட்ட அனுபவமும் இல்லாமல் இருக்கின்ற தமிழக நண்பர்களால் மிகப் பெரிய எதிரியான இந்தியாவை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடுதல் உடனடியாக சாத்தியமானதா..?

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவான நவீன இராணுவ தளபாடங்களை இறக்குமதி செய்த நாடும், உளவுத்துறையின் முகவர் விரிவாக்கத்திலும், நவீன இராணுவ சாதனங்களின் இற்றைப்படுத்தலிலும் முன்னணியில் இருக்கும் நாடும் இந்தியாதான்.

இப்படியானதொரு நிலையில் இந்திய, இராமாயண, சினிமா, சாதி மோகத்தில் காலங்காலமாக மூழ்கிக்கிடந்தவர்களிடம்  ஏன் இந்தியத்துக்கு எதிராக போராட வேண்டுமென்று கருத்தியல் ரீதியில் அவர்களை தயார் செய்தல் தானே இப்போது தேவையானது. கருத்தியல் ரீதியில் தயார் செய்யாமல் உடனே ஆயுதமெடுத்து அடி என்று பெரிய இவன் மாதிரி வகுப்பெடுப்பது முகநூலில் மட்டுமே சாத்தியமானது.

இணக்க அரசியல் தான் எமக்கு சரியானதென அன்றிலிருந்து இன்றுவரை அரசை வருடிக் கிடப்பவர்களின் வெளிநாட்டுக்கான இணைப்பாளராக செயற்படும் நீங்கள் ஏன் இந்த வகுப்பை அங்கு எடுக்கக் கூடாது?

கருத்தியல் ரீதியில் எம்மினத்தின் விடுதலைக்கான தேவையை, உணர்வு பூர்வமாக முன்வைக்கும் போது ஒரு கட்டத்தில் தமிழ்தேசிய அரசியலை முன்வைத்தவர்களின் கட்டுப்பாட்டை மீறி அவர்களே அறியாமல் ஓர் ஆயுதப் போராட்டம் உருவாகி தன் வழியில் செல்லும், அதுவரை தேவையானது கருத்தூட்டல்.
இன எழுச்சிக்கான கருத்தூட்டத்தை செய்யாமல் முன் ஆயத்தமில்லாமலிருக்கும் சமூகத்தை உடனே ஆயுதமேந்து என்று சொல்வது முட்டாள்தனமானது.

இப்போது வலைப்பின்னலாக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும் உலக இராணுவ தொழில் நுட்ப வளர்ச்சி என்பது 90℅ இலும் நாம் 0℅  இலும் நிற்கிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழரசன் காலத்தில் எந்தளவிற்கு நம் இராணுவ நிலை? இருந்ததோ இப்போது அதனை விட குறைந்த பலத்தில் நாமும், 100 மடங்கு வளர்ந்து இந்தியமும். 

அஞ்சுவது அஞ்சாமை பேதமை'
மற்றும்
வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்

காலம் தேவையெனில் கனியும் அதுவரை உரியவர்களை உதறேல்..

வாழ்க்கை தத்துவங்கள்

Saturday, December 27, 2014

வாழ்க்கை தத்துவங்கள்.... 

புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....

அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!

உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!

* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.

*ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.

* அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.

* கற்பனையில் சித்திரத்தை வரைந்து விடலாம், ஆனால் ஒருவனின் மனதை புரிந்து கொள்ளாமல் நண்பன் ஆகி விட முடியாது.

* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..

* ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.

* ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...

* இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.

* நான் என்று சொல்லும் போது எனது அகத்தில் இருப்பதையே கூறுகிறோம், எனது என்று சொல்லும் போது எனக்காக புறத்தில் இருப்பதை கூறுகிறோம். இதை எல்லாம் தாண்டி நாம் என்று கூறும் பொழுதே வெளியில் எமக்காக காத்திருக்கும் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம்.

* மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட. மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு மனிதா!

* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக....

* கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.

* மனதில் பூக்கும் மல்லிகை பூ அன்பு. அதனைத் தூக்கி குப்பையில் போட்டால் கூட நறுமணம் வீசும்.

* ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தாரமாய் இருப்பதே அழகு.நேரத்திற்கு தகுந்த மாதிரி செயற்ப்படாதே.

* திட்டமிடல் வாழ்கையில் அவசியாமாய் இருக்கிறது, ஆனால் திட்டமிட்டபடி வாழ்வு செல்லாவிடின் வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு திட்டமிடுங்கள் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள்.

* ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்.

* கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்(அன்பானவரைக்) கூட எதிர்த்து விடுகின்றது..

* கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..

* கடற்கரையில் இருக்கும் கப்பலை விட கடலினுள் இருக்கும் படகின் பெறுமதி அதிகம். அது போல் மனிதா நீ உருவாக்கும் பொருள் உபயோகாமானால் சிறப்பு.

* பெருங் கடலுக்கு எல்லை சிறிய நிலப்பரப்பு..உனக்கு எல்லை உனது பெற்றோர்.

கடல் எல்லையைத் தாண்டினால் நிலம் அழிந்துவிடும். நீ எல்லையத் தாண்டினால் நீ அழிந்து விடுவாய்.

* தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான்.

தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை.

சகோதரர் துணையிருப்பின் ஒரு போதும் தனியன்(தனித்த ஆள்) ஆகான்.

இத்தனையும் என்னிடம் உண்டு... உன்னிடம் உண்டா??

* வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்

வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்

வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.

* அன்பின் ஆழம் தெரியாத மனிதா.

நீ உன் தாயின் அரவணைப்பை அறிந்திருக்க மாட்டாய்.

நட்பின் ஆழம் தெரியாத மனிதா.

நீ உன் தந்தையின் பாசத்தை அறிந்திருக்க மாட்டாய்.

காலப் போக்கில் உன் வாழ்வே தெரியாது இருந்து விடுவாய்....

* கண்ணை மூடும் போது தூங்குகிறோம். கண்ணைத் திறக்கும் போது எழுகிறோம். அது போல் விழுகிற போது எழுந்துவிடு எழும் போது விழுவது சகஜம் அதற்காக விழுந்த படியே இருந்து விடாதே..

* குறை உடலில் இருந்தால் அதை நீ பொருட்ப்படுத்தாதே. உள்ளத்தில் உள்ளதா முதல் அதை நிவர்த்தி செய்து விடு நீ உன்னை நேசிப்பாய் பின் மற்றவர்கள் உன்னை நேசிப்பர்.

* கனவு இல்லம் கனவாகலாம்... ஆனால் இல்லம் ஒரு போதும் கனவாகி விடக்கூடாது..

* இமைகள் திறக்கின்றன நீ பார்ப்பதற்கு, இமைகள் மூடிவிட்டால் பார்வையை இழந்துவிடுவாய்

உதடுகள் திறக்கின்றன மனதில் இருப்பதை வெளியிட, உதடுகள் மூடிவிட்டால் உமையாகிவிடுவாய்.

பிரிவுகள் ஏற்படும்போதே நீ வெளிச்சத்தை சந்திக்கிறாய் வாழ்வில்.

* ஒருவன் எப்பொழுது தனக்கு ஏற்படும் தடைகளையும் துன்பங்களையும் கருத்திற்க் கொள்ளாமல் வாழ்கிறானோ அவனே வாழ்வில் நிறையத் தோல்விகளைச் சந்தித்தவனாவான். வெற்றி பெற்றவன் துன்பத்தையும் தடங்களையுமே வாழ்வில் கொண்டவனாக இருப்பான். பல தடவை தோற்றுவிடு நீ உன் வாழ்வை வென்று விடுவாய்.

* காற்றின்றி படகுகள் அசைவதில்லை

தாயே நீ இன்றி எனக்கு முன்னேற்றம் ஏது?

கடல் அலையே அசையாதிருக்கும் படகை மூழ்கடிக்காதே.

* உனக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால் உன் பெற்றோரைத் தானே முதல் கேட்க்கிறாய்.. என் நீ வளர்ந்த பிறகு அவர்களிடம் கேட்பதை விட்டு உன்வழி போகிறாய். நீயும் ஒரு நாள் பெற்றோர் ஆவாய் என்பதை மறந்து விட்டாயோ?...

* பெற்றோரின் பெறுமதி என்ன தெரியுமா? நீ வாழும் வரை அவர்களுக்கு துன்பம் கொடுக்காது அவர்களது மரியாதையை இழக்க விடாது காப்பது. இல்லையேல் உன் பெறுமதி உன்னை விட்டு சென்று விடும்...

* காதலிப்பதால் ஏற்படும் நன்மையை விட அக் குறுகிய காலத்தில் ஏற்றப்படும் தீமை அதிகம்...நான் காதலித்தவனும் அல்ல காதலிப்பவனும் அல்ல..

* கனவே உன் கடலில் என்னை முழ்கடித்து விடாதே எனக்கு நீந்த தெரியும். அவ்வாறு நான் நீந்தித் தப்பி விட்டால் நீ தோற்று விடுவாய்.

* நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும். அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்.....

* ஒருவரின் அன்பு பற்றி நீ அறிய வேண்டுமா.. ஒரு முறை பிரிவை சந்தித்து விடு...

* பொய்யை அறிந்து கொள்வதை விட உண்மையை அறிந்து கொள்வது இலகு.

* தோல்வி ஏற்ப்படின் தோற்று விட்டோமே என்று எண்ணாதே நீ ஒரு நாள் வென்று விடுவாய், ஆனால் நேரத்தை வீணாக்காதே அது உன் தோல்வியை பல மடங்கு அதிகரித்து விடும்.

* உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்..

* இரவில் கண்ணை முடிய போது கனவுகள் தோன்றுகிறது. உண்மையில் நடப்பது போன்று மனதில் தோன்றும். கண் விழித்த பிறகுதான் தெரிகிறது கண்டது கனவு என்று. அக் கனவு நிஜமாக வேண்டுமெனின் நம் முயற்சி பல மடங்காக வேண்டும்.

கனவு காண் அது நற்கனவாயின் நிகழ்த்தி முடி....

* தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கிறதா? ஒரு கணம் நீ ஏன் தோற்றாய் என்று சிந்தி. அதன் பிறகு உன்னை தோல்வி சந்திக்க சிந்திக்கும்.

* அன்பு என்பது சிறந்த ஒன்று அது அழிவதற்கு நீங்கள் காரணம் ஆகி விடாதீர்கள்...

* புரியாத வாழ்க்கைப் பாதைகள்....... தொடரும் பயணங்கள் முடியும் இடம் தெரியாமல் தவிக்கும் உள்ளம்.......

* அழுவதற்கு எனக்கு மனம் இல்லை காரணம் நான் அழுதால் என் தாய் அழுது விடுவாளே என்று..

* உனக்கு அடுத்தவனை பிடிக்கவில்லையா ஒதுங்கிகொள். உன்னைப் பிடிக்கவில்லையா நீ தலை சிறந்தவன் என நிரூபித்து விடு. அதன் பின் அவர்கள் தாமே வருந்துவார்கள் உன்னை எண்ணி..

* வானம் பூமியைத் தொட்டால் அது அதிசயம் ஆனால் மனிதன் வானத்தை தொட்டால் அது

சாதனை. அதிசயத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட வானத்தை தொட முயற்சிப்பவனாக

இருந்தால் அதுவே உன் வாழ்வை வெற்றி பயணத்தில் தொடக்கி வைக்கும்...

* வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும் கடைசில ஒரு பெட்டிக்க தான் முடியும்.

* படிப்பதற்காக எல்லா சந்தர்ப்பங்களையும்

இழக்கத் தயாராக இருங்கள்.

எந்த சந்தர்ப்பத்திற்காகவும் படிப்பை

இழக்கத் தயாராகி விடாதீர்கள்!

எனில்

நீங்கள் எங்கிருந்து வந்தாலும்

எங்கு வேண்டுமானாலும் போகலாம்...

* இன்பம் என்பது கானல் நீர் போன்றது ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும் அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே பிறகு அது உன்னை வாழ விடாது.......( கானல் நீர் குளிர் நாடுகளில் தெரிவதில்லை காரணம் குளிர் நாடு என்பதால்.)

* பொறுமை, விட்டு கொடுத்தல் இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்வில்... ஆனால் இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.... அன்புக்கு மட்டும். என்றும் எல்லையும் இல்லை எதிரியும் இல்லை... மற்றவரின் பொறுமையை சோதிக்காதீர் அவ்வாறு சோதித்து பொறுமை இழந்தால் பிரச்சனை நமக்கு தான் அதிகம்..

* கலகலப்பாய் இருங்கள் வேண்டாம் என்று ஒரு போதும் உங்களுக்கு சொல்லவில்லை

ஆனால் மற்றவனை கலங்கப்படுத்தாது இருங்கள் ..அவ்வாறு இருப்பீர்கள் ஆனால்

நீங்கள் என்றுமே புன்னகை நிரம்பிய முகத்தோடு இருப்பீர்கள....

* நாம் எப்போதும் மேலே போகும் விமானத்தை அண்ணார்ந்து பார்த்து கழுத்தை நோக வைப்பதை விட நேரே பார்த்து எமது முன்னேற்றத்தை பார்த்திருந்தால் என்றோ வாழ்க்கையில் முன்னேறியிருப்போம். இது மேல் அண்ணார்ந்து பார்க்கும் விமானத்துக்கு மட்டும் அல்ல அடுத்தவனை பார்த்து செய்வதற்கும் பொருந்தும்...

* நல்ல நண்பன் உனக்கு வேண்டும் ஆனால் நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நீ உண்மையாகவும் இருக்கவேண்டும்..

( நீ உனது நண்பனை பற்றி கதைப்பதாக இருந்தால் அவன் உன்னருகே இருக்கும் போது கதை அவன் சென்ற பிறகு கதைக்காதே அவ்வாறு கதைப்பாயாக இருந்தால் நீ உனது நண்பனை இழந்து விடுவாய்)

* நட்பின் இலக்கணம் தெரிய வேண்டுமானால் உங்கள் நட்பை நேசியுங்கள் அதன் இலக்கணம் மட்டுமல்லாது அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளவீர்கள்.

* எதையும் தூரத்தில் இருந்து பார்த்து நம்பாதீர்கள்.........அங்கே என்ன

நடக்குது என்ன நடந்தது என்று தெரியாமல் கதைக்காதீர்கள்.............

இதுக்கு தான் சொல்வார்கள் காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று..

* கடன் கொடுங்கள் அதை திரும்பப் பெற்று விடுவீர்கள் ஆனால் களவு கொடுத்து விடாதீர்கள் அதை திரும்பப் பெற முடியாது...

* கண்கள் எமது முதுகை பார்த்ததில்லை கால்த் தடங்கல் கூட மாறிப் பதிவதில்லை ஆனால் மனிதன் மட்டும் மாறுகிறான் காரணம் மட்டும் புரியவில்லை ஏனோ ..

* நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து குடும்பம் என்பது பெரிய சொத்து ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது.......

Wednesday, July 18, 2012

நாத்திகம்

நாத்திகம் இதுவரை எனக்கு எதுவும் தந்தது இல்லை
இனியும் தராது
ஒரு போதும் எனக்கு பாதுகாப்பு தந்தது இல்லை
என் கண்ணீரை துடைத்தது இல்லை
பொய்களிடமும் துரோகத்திலும் இருந்து என்னை காப்பாற்றியது இல்லை
என் வெற்றிகளையும் தோல்விகளையும் பற்றி அதுக்கு ஒரு போதும் கவலை இல்லை
எனக்கு எது சரி எது தவறு என்று சொல்லியது இல்லை
என் கனவுகளை உண்மையாக ஒரு போதும் உதவாது
நாத்திகம் ஒரு போதும் என் அகத்தை தூண்டியது இல்லை
அதை நம்ப வேண்டும் என்று என்னிடம் கட்டளையிட்டது இல்லை
என்னை ஒரு போதும் கீழே விழுக வைத்து இல்லை
என் சாவுக்கு பின் வர போகும் நரகத்தை பற்றி பேசியது இல்லை
யாரையும் வெறுக்க சொல்ல வில்லை
யாரையும் நேசிக்கவும் சொல்ல வில்லை
என் வெற்றிக்கெல்லாம் ஒரு போதும் பொறுப்பு ஏற்று கொண்டது இல்லை
என் துயரங்களுக்கு எல்லாம் ஒரு போதும் அபத்தமாக பதில் அளித்தது இல்லை
எனக்கு நாத்திகம் அறிவுரை செய்தது இல்லை
ஆம் நாத்திகம் எனக்கு எதுவும் செய்தது இல்லை
நான் அதனிடம் எதுவும் கேட்டது இல்லை..
நான் நம்பிய கடவுள் எது எல்லாம் என்னிடம் இருந்து பறித்து கொண்டாரோ அது மட்டுமே நாத்திகம் எனக்கு தந்தது..
இப்போது நான் நானாகவே இருக்கிறேன்
உண்மைகளை உணர்கிறேன்..
உங்கள் வார்த்தைகளையும் கோவத்தையும் என்னிடம் காட்டாதீர்கள்
உங்களையும் உங்கள் கடவுளையும் நான் அவமான படுத்த வில்லை
அவர் இல்லை என்று நான் சொல்ல வில்லை
அவர் எனக்கு வேண்டாம் என்று தான் சொல்கிறேன்
என் வாழ்கையை நானே வாழ்ந்து விட்டு போகிறேனே
அவர் வாழ்கையை அவர் வாழ்ந்து விட்டு போகட்டும்
நாத்திகத்தை பிடித்து கொண்டு வாழவில்லை
கடவுளை விட்டு விட்டு உண்மைகளுடன் வாழ்கிறேன்
நான் கோவில்களையும் மசுதிகளையும் இடிக்க சொல்ல வில்லை
கடவுளிடம் மண்டியிட வேண்டாம் என்று சொல்ல வில்லை
உங்கள் கடவுள் உங்கள் கால் என்ன வேனாலும் செய்யுங்கள்
கடவுளுக்கு காணிக்கை தராதீர்கள் என்று சொல்ல வில்லை
உங்கள் கடவுள் உங்கள் காணிக்கை என்ன வேனாலும் செய்யுங்கள்
எனக்கு நாத்திகன் என்று முத்திரை குத்தி, அந்நிய படுத்தி என் வாழ்கையை கேள்வி கேட்காதீர்கள்
உங்களை போல் நான் வாழவில்லை என்பது உண்மை
அதற்கான அவசியம் எனக்கு இல்லை என்பதும் உண்மை
நாத்திகன் என்றால் எல்லாவற்றிலும் பகுத்தறிவோடு இருப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள்
என்னிடமும் சுயநலம் உண்டு, என்னிடமும் கோவம் உண்டு, என்னிடமும் ஆசைகள் உண்டு
நான் பகுத்தறிவோடு இருப்பதும், நாத்திகவாதியாக இருப்பதை விட நான் நானாக இருப்பது தான் எனக்கு முக்கியம்..
நீங்கள் சொல்லும் நாத்திகவாதத்தை பற்றி எனக்கு ஏதும் தெரியாது அதை பற்றி என்னிடம் ஏதும் கேட்காதிர்கள்
நான் சொல்லும் நாத்திகத்தை பற்றியும் என்னிடம் ஏதும் கேட்காதிர்கள்
என்னிடம் எந்த பதிலும் இல்லை, எந்த முடிவுகளும் இல்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இப்போது இருக்கிற என் கருத்துகள், என் கனவுகள், என் ஆசைகள் என் கொள்கைகள் எல்லாம் மாறக்கூடும்
அது என் தேடலை சார்ந்தது
உங்கள் கடவுளை சார்ந்தது இல்லை
என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்
எல்லாவற்றுக்கும் திமிராக பதில் சொல்பவள் நாத்திகவாதி என்றால் சரி அப்படியே அழையுங்கள்
எனக்கு தெரிந்து எந்த நாத்திகனும் நாத்திகதிற்காக உயிரை விட்டது இல்லை,
நீங்கள் சொல்லும் ஆத்திகவாதிகள் யாரும் உலகை மாற்றியது இல்லை
உலகின் அற்புதமான கலைகளை உருவாக்கிய கலைஞர்கள் எல்லாம் நாத்திக வாதிகள் தான்!
நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன்
நாத்திகவாதியாக அல்ல
பகுத்தறி வாளியாக அல்ல
நான் நானாக…..   
Arthi Vendan எழுதியது

Monday, May 28, 2012

நீயா நானா.. சரிதானா??

நீயா நானா.. சரிதானா?? நீயா நானா, என்பது பொது விவாத நிகழ்ச்சியா? இல்லை ஒருதலைபட்சமாக நடக்கும் கருத்து திணிப்பா..?? சில நாட்களாக இந்நிகழ்ச்சியில் நடக்கும் விவாதங்களை கவனித்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுக்கு பார்வையாளர்களை இழுத்துசெல்லும் படியான விவாதமாகத்தான் இருக்கிறது. மீறி எதிர்கருத்து கூறுவோரை அசிங்கபடுத்தி அடக்கிவிடுவதும் தெரிகிறது. இந்நிகழ்ச்சி/கோபிநாத் தன் கருத்துகளை சமூக கருத்தாக பரப்புரை செய்வதாக தோன்றுகிறது. நிகழ்ச்சியின் போக்கையும், சிறப்பு விருந்தினர்களையும் கவனித்தால் இது என்னவோ Psychological Influencing-Social Media Marketing போல் தோன்றுகிறது. உதாரணமாக: எல்லா நிகழ்ச்சியிலும் தன்னை நடுநிலைவாதி என்று அடையாளப்படுத்திகொள்ளும் திரு கோபிநாத், போன வார அரசியல் தலைப்பில் சாதி கட்சிகள் தவறில்லை என்பன போன்ற வாதங்கள் பெரும் முரண்பாடானவை. இதனை பொதுமக்கள்/சமுதாய கருத்தறியும் பொது விவாத நிகழ்ச்சியாக கருத முடியவில்லை.

  • டாக்டர் வேலையை விட்டுவிட்டு திரைத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று பவர் ஸ்டாரை பார்த்து கேட்ட கோபிநாத் , கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு திரைத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று சூப்பர் ஸ்டாரை பார்த்து கேட்க்க முடியுமா?
  • உங்க சொந்தக் காசுல உங்க படத்தை ஓட்டறீங்களா என்று பவர் ஸ்டாரை பார்த்து கேள்வி கேட்ட கோபிநாத் , கருணாநிதியை பார்த்து , உளியின் ஓசை , கிழவரின் இம்சை , பெண் சிங்கம் , அசிங்கம் , இளைஞன் , வயோதிகன் , என்றெல்லாம் மக்களை இம்சிக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுதி சொந்தக் காசு கூட இல்லாமல் ஊர் காசை அடித்து படத்தை ஓட்டுறீங்களா என்று கேள்வி கேட்க்க திராணி இருக்கிறதா ?

    மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
    எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
    தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
    கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
    ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
    பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
    குறைந்துவிடவில்லை...

    சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
    படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
    விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
    சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

    நான் அவர் படமும் பார்த்தது இல்லை..
    ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
    தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

    மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
    தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..

Sunday, September 11, 2011

ஆண்மையின் அடையாளம்


ஆண்மையின் அடையாளம்

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
ஆண்கள் தலையிலும், முகத்திலும் முடிவளர்த்துக் கொள்வதையும் மழித்துக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் செய்தி சங்க காலந்தொட்டே இருக்கிறது.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா எனத் திருவள்ளுவர் கூறியுள்ளதிலிருந்து இதனை அறியலாம்.

நீண்ட தலைமுடியையும், நீண்ட தாடியையும் வைத்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் தவசீலர்களாகவே இருந்து வருகின்றனர், இருந்தாலும் உலகியல் வாழ்வில் உள்ளவர்களும் தாடி வைத்திருந்த செய்தியை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

தாடியைச் சங்க இலக்கியம் "அணல்" என்று கூறுகிறது.

இன்று தாடி வைத்துக்கொள்வதை சோகத்தின் அடையாளமாகச் சிலர் வெளிப்படுத்துகின்றனர்!

சிலருக்கு அது சிந்தனையின் அடையாளம். சிலர், அழகின் அடையாளமாகக் கொண்டிருக்கின்றனர்.

சங்க காலத்தில் "தாடி" ஆண்மையின் அடையாளமாக இருந்த செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகிறது.


"அடிபுனை தொடுகழல் மைஅணற் காளைக்கு என் 
தொடி கழித்திடல் யான் யாய் அஞ்சுவலே!

(புறநா - 83)
"காலில் செறிந்த வீரக் கழலை உடையவன்; மை போன்ற கரிய தாடியை உடையவன்; அத்தகையவனுக்காக என் கை வளையல் கழன்று போகின்றனவே!"
எனப் பெருநற்கிள்ளியைப் புகழ்ந்து தம் காதலை நக்கண்ணையார் எனும் புலவர் வெளிப்படுத்திப் பாடியுள்ளார்.

"புலம் புக்கனனே! புல் அணற்காளை

(புறநா - 28)
எனும் புறநானூற்றுப் பாடலில் ஒரு வீரனுக்குப் புற்களைப்போல முகத்தில் தாடி மண்டிக்கிடந்த செய்தியை அறிய முடிகிறது.
சில சங்கப் பாடல்களில் உடன்போக்கில் செல்லும் தலைவனைக் குறிக்கும்போது அவனை,
- "மைஅணல் காளை" - "கருமையான தாடியை உடைய இளைஞன்"
என்று அடையாளப்படுத்திப் பாடியுள்ளதை அறியமுடிகிறது.
- "மதி உடம்படுத்த மை அணற் காளை
 என அகநானூறும் (221)
- "மை அணற் காளையொடு பைய இயலி என ஐங்குறுநூறும் (389)
குறிக்கின்றன.

"..... ..... இன்றே 
மை அணற் காளை பொய் புகலா 
அருஞ்சுரம் இறந்தனள் என்ப

(நற்.179)
என நற்றிணைப் பாடலும் சுட்டுகிறது.
தலைவியின் வீட்டார், திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாதபோது, தலைவன், தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போக்குச் செல்வது சங்ககால மரபு. அவ்வாறு அவர்கள் உடன்போக்குச் செல்லும்வழி கடுமையான பாலை நிலமாகவே இருக்கும். தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன், கரிய தாடியை வைத்திருந்தான் என்று குறிக்கப்பெறுகிறான்.

உடன்போக்குச் செல்வதற்குச் துணிச்சல் வேண்டும். அதே நேரத்தில் தலைவியின் வருத்தத்தையும் தன் வருத்தத்தோடு இணைத்துக் கொள்ளும் பக்குவமும், வலி ஏற்கும் உடலும் வேண்டும். எனவே, வருத்தம் தோய்ந்த துணிச்சல் உள்ளத்தின் அடையாளமாகத் தாடி இங்கே தலைவனுக்குப் பொருந்தியிருக்கிறது எனலாம்.

"அணல்" என்பது தாடி என்றால், "மை அணல்" என்பது மைபோன்ற கருத்த தாடி என்று பொருள்.

"மை அணல்" என்று வருகிற இடங்களில் எல்லாம், குறிக்கப்பெறும் தலைவன், இளமையும் ஆண்மையும் பொருந்தியவன் என்பதை உணரமுடிகிறது.
நற்றிணையில் ஒரு தலைவியின் தந்தை பற்றிய குறிப்பில், "அவன் மை போன்ற கருந்தாடி உடையவன்",என்று சுட்டப்படுகிறான்.

"மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை 
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் 
தந்தை தண் ஊர் இதுவே
(நற் - 198)
தலைவி, "இது என் ஊர்" என்று குறிப்பிடாமல், "வீரம் பொருந்திய தனது தந்தையின் ஊர்" என்று குறிப்பிடுகிறாள்.

இங்கே கருந்தாடி ஆண்மை, வீரம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக அமைகிறது.

தற்காலத்தில், தாடி வைப்போர் அதை அதிகம் வைக்காமல், கத்தரிக்கோலால் அளவுபடுத்தி வெட்டி, அழகுசெய்து கொள்வார்கள். இப்படிப்பட்ட தாடி அழகு முறைமை சங்க காலத்திலும் இருந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.


"குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் 
செவி இறந்து தாழ்தரும் கவுளன்
(புறநா. 257)
ஒரு வீரன் குச்சுப்புல் போன்ற குறுந்தாடி வைத்திருந்ததையும் அவனது தலைமுடி காதுகளை மறைத்து வளர்ந்திருந்ததையும் இந்தப் பாடல் குறிக்கிறது.
சங்க இலக்கியம் "அணல்" என்ற சொல்லால் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல்,
  • கோழி,
  • சேவல்,
  • ஓந்தி,
  • குரங்கு
ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது.

- "உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல்
 என்று நற்றிணை (181) கரிய மோவாயை உடைய குருவியின் சேவலையும், 
- "மனைஉறை கோழி அணல் தாழ்வு அன்ன" என்று அகநானூறு (187) கோழியின் தாழ் மயிரையும், 
- "வைவால் ஓதி மை அணல்" என்று அகநானூறு (125) ஓந்தியின் தாடியையும் குறிப்பிடுகின்றன.
நற்றிணை (22) குறிப்பிடும் மந்தியின் செயல் காட்சி நகைப்புக்குரியது.

தினைப்புனத்தில் தினைக் கதிர்களைப் பறித்துக்கொண்டு, கடுவன் எனப்படும் ஆண் குரங்கோடு மலையேறிய மந்தி எனப்படும் பெண்குரங்கு தினைக் கதிர்களை நிமிண்டி, அலை அலையாய் இருந்த தாடியை உடைய கன்னம் (வாய்) நிறைய அமுக்கிக் கொள்கிறதாம்.
இக்காட்சி நோன்பிருக்கும் தவசீலர்கள் தாடியோடு காட்சியளிப்பதற்கு இணையாக இருக்கிறதாம்.
அணல் தரும் குறிப்புகள், உயிரினங்களுக்குத் தரும் அடையாளங்கள் ஏராளம் உள்ளன.
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்